யுத்தம் முடிந்த பின் எடுக்கப்பட்ட நடவடிக்கை..

0
202

12,200 விடுதலைப் புலி போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து தற்போது 12 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர்கள் மீண்டும் பயங்கரவாத அமைப்பாக தலைதூக்கவில்லை என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

ஒரு சிலர் தொடர்பாக தகவல்கள் வந்த போதும் அதற்கான வாய்ப்புக்கள் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதி அமைச்சில் நேற்று (03.08.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்ததன் பின் விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக இருந்த 12200 பேரை தாம் புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.