இந்திய தூதுவருக்கும் மனோ குழுவினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

0
245

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய தூதுவருக்கும் இடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(04.08.2023) மாலை கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்திய தூதுவரின் அழைப்பை ஏற்று நிகழும் இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இன்று(01.08.2023) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியத் தூதுவருக்கும் மனோ அணியினருக்கும் இடையே விசேட பேச்சுவார்த்தை! | Mano Ganesan Indian High Commissioner Meeting