வைத்தியசாலையில் கைவிலங்கில் ஊடகவியலாளர்; வெளியான சர்ச்சைக்குரிய புகைப்படம்

0
197

பொலிஸாரால் தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவைப் பொரளை பொலிஸார் வைத்தியசாலையில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் தரிந்து வைத்தியசாலையிலும் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே தரிந்து இருக்கின்றார்.

இந்நிலையில் “ஊடகவியலாளர் தரிந்து குற்றவாளி அதனால் கைவிலங்கிட்டே வைத்திருப்போம்” என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையிலும் கைவிலங்குடன் ஊடகவியலாளர்; வெளியான சர்ச்சை புகைப்படம் | Journalist In Handcuffs In Hospital Too

பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது

ஊடகவியலாளர் தரிந்து உடுவகெதர பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இலங்கையின் பிரதான ஊடக அமைப்புகளான உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன இது தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

மருத்துவமனையிலும் கைவிலங்குடன் ஊடகவியலாளர்; வெளியான சர்ச்சை புகைப்படம் | Journalist In Handcuffs In Hospital Too

அதோடு பொலிஸ்மா அதிபர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மருத்துவமனையிலும் கைவிலங்குடன் ஊடகவியலாளர்; வெளியான சர்ச்சை புகைப்படம் | Journalist In Handcuffs In Hospital Too

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் திருட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (28) பொரளை பகுதியில் இடம்பெற்றபோதே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரினால் மூர்க்கத்தனமாக இழுத்து கைதுசெய்யப்பட்டார்.

மருத்துவமனையிலும் கைவிலங்குடன் ஊடகவியலாளர்; வெளியான சர்ச்சை புகைப்படம் | Journalist In Handcuffs In Hospital Too