எலான் மஸ்க் முன்னாள் மனைவிக்கு பிரபல நடிகருடன் நிச்சயதார்த்தம்!

0
283

எலான் மஸ்க் முன்னாள் மனைவி தலுலா ரிலேவுக்கு பிரபல நடிகருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க், தலுலா ரிலே தம்பதி 2016 இல் விவாகரத்து செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக தலுலா ரிலே, தாமஸ் பிராடியுடன் டேட்டிங் செய்து வருகிறார். ரிலே தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தனது முன்னாள் மனைவி மற்றொரு திருமணத்திற்கு தயாராகி வருவதை அறிந்த எலான் மஸ்க், சிவப்பு இதயம் கொண்ட எமோஜியுடன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மறுபுறம் தாமஸ் பிராடி சாங்ஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் அவர்களது நிச்சயதார்த்தம் குறித்து தெளிவுபடுத்தி உள்ளார்.