மனைவியைக் கொன்று மகனின் உதவியுடன் புதைத்த கணவன்!

0
340

பதுளை, ரிதிமாலியத்த  பிரதேசத்தில் 50 வயதுடைய பெண்ணொருவர் அடித்துக் கொல்லப்பட்டதுடன் சடலம் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளதாக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

புதைக்கப்பட்ட பெண்

மனைவியைக் கொன்று மகனின் உதவியுடன் புதைத்த கணவன் - பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் | Husband Killed His Wife Sri Lanka Police

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கணவன் கைது

இதனையடுத்து சந்தேகநபரான கணவர் மனைவியை தாக்கிவிட்டு பின்னர் மூத்த மகனின் உதவியுடன் சடலத்தை தோட்டத்தில் புதைத்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் 70 வயது கணவர் மற்றும் அவர்களது 26 வயதான மூத்த மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.