கூகுள் நிறுவனத்தில் சுமார் 13 ஆண்டு காலம் செய்தி இயக்குநராக பணியாற்றிவந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதவ் சின்னப்பா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

12 ஆயிரம் பேர் பணி நீக்கம்
கூகுள் நிறுவன ஊழியர்கள் 12 ஆயிரம் பேர் கடந்த ஜனவரி மாதம் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், உயர் பொறுப்பில் இருந்த ஒருவர் தற்போது விலக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்ட மாதவ் சின்னப்பா,
13 ஆண்டு காலத்தில் தமது குழுவால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் மன நிறைவை தருவதாக கூறியுள்ளார்.

டிஜிட்டல் நியூஸ் இனிஷியேட்டிவ், ஜர்னலிசம் எமர்ஜென்சி ரிலிஃப் ஃபண்ட் போன்றவையும் இதில் அடங்கும் என்று மாதவ் சின்னப்பா தெரிவித்துள்ளார்.
சிறிது ஓய்வுக்கு பிறகு இந்தியாவில் உள்ள தனது தாயாருடன் நேரத்தை செலவிட உள்ளதாகவும் மாதவ் சின்னப்பா கூறியுள்ளார்.