இலங்கையில் பரபரப்பு; கணவரை தீ வைத்து கொளுத்திய மனைவி!

0
354

மொரட்டுவயில் பெண் ஒருவர் கணவரை தீயிட்டு கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மொரட்டுவ, மொரட்டுமுல்ல பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவரை தீவைத்து கொழுத்திய மனைவி; இலங்கையில் பரபரப்பு | Wife Set Her Husband On Fire

 குடும்பத் தகராறு

கடந்த 18 ஆம் திகதி கணவன் மற்றும் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவி கணவரை எரியூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீக்காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த கணவர் கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.