மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் தற்போது வரை 16 போ் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவக்கின்றன.
கேமரூன் தலைநகா் யாவுண்டேயிலிருந்து 210 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய நகரமான டெளவாலாவில் நேற்றையதினம் (23.07.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டாா் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு மாடி கட்டடம் இடிந்து ஒரு சிறிய கட்டடத்தின் மீது விழுந்ததில், இடிபாடுகளுக்கு இடையே காயமடைந்தனா்.
‘மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தோா் எண்ணிக்கை அதிகமாகக் கூடும்’ என அந்தப் பிராந்தியத்தின் ஆளுநா் தெரிவித்துள்ளார்.
டெளவாலா நகரில் தரம் குறைவாகக் கட்டப்பட்ட கட்டடடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அவ்வப்போது நேரிடுகின்றன.
மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் நிறைந்த பகுதிகளில் உள்ள கட்டடங்களை டெளவாலா நகர நிா்வாகம் தற்போது இடித்து வருகிறது. ஆனால், இப்போது இடிந்து விழுந்த நான்கு மாடி கட்டடம் அந்த அபாய பகுதியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.