விஜய்யுடன் அரசியல் களத்தில் இறங்குவாரா விஷால்? அவரே சொன்ன பதில்

0
312

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் அடுத்து மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து மார்க் ஆண்டனி திரைப்படக் குழுவினர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது மாணவி ஒருவர் விஷாலிடம், “நீங்கள் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பது எல்லாருக்கும் தெரியும். விஜய் அரசியலுக்கு வரவுள்ளார்”.

“தளபதியையும், புரட்சி தளபதியையும் திரையில்தான் பார்க்க முடியவில்லை. இனிவரும் காலங்களில் அரசியலில் பார்க்க முடியுமா” என கேள்வி எழுப்பினார்.

Vishal

இதற்கு பதிலளித்த விஷால், ”இது கடவுளால்தான் நிர்ணயிக்கப்பட வேண்டிய விஷயம், ஏற்கெனவே எல்லாரும் அரசியல்வாதிகள்தான்.

எல்லாரும் பசியென்று வந்தவர்களுக்கு 100 ரூபாய் கொடுத்து இருப்பீர்கள். என்னை பொறுத்தவரை அரசியல் என்பது சமூகசேவை. இது வியாபாரம் அல்ல. பசியென்று வருபவர்களுக்கு 50 ரூபாய் கொடுத்தாலே அவர்கள் அரசியல்வாதிதான்” என கூறினார்.