“வலியை மறக்க பாடுங்கள், நமக்கு ஒரு வழி பிறக்க பாடுங்கள்” ஈழத்து குயில் கில்மிஷாவை பாராட்டிய சீமான்

0
266

“நம் வலியை மறக்க பாடுங்கள் நமக்கு ஒரு வழி பிறக்க பாடுங்கள்” என்று யாழ்ப்பாணத்து சிறுமி கில்மிஸ்ஷாவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் பாராட்டியுள்ளார்.

சரி கம பா பாடல் நிகழ்ச்சிக்கு நேற்று நடிகர் சீமான் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். “மண்வாசனை” சுற்று பாடல் போட்டியில் ஈழத்து பெண் கில்மிஸ்ஷா பாடிய பாடல் அவரை கவர்ந்திருந்தது.

இதன்போது பேசிய நடிகர் சீமான்,

யாழ் மண்ணில் இருந்து பாட வந்திருப்பது எனக்கு மிக பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Saregamapa Li'l Champs Season3

தந்தை பாரவூர்தி ஓட்டுராக இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். நீங்கள் தொடர்ந்து பாட வேண்டும். நம் வலியை மறக்க பாடுங்கள், நமக்கு ஒரு வழி பிறக்க பாடுங்கள் என்று பாடகி கில்மிஸ்ஷாவை பாராட்டினார். மேலும், சாதிக்கும் போது மட்டும் தான் நமக்கு ஒரு இடம் கிடைக்கும்.

இப்போது எம் பிள்ளைகளுக்கு இருக்கும் ஒரே வழி எப்படியாவது ஓடி சாதித்து விட வேண்டும் என்பதுதான். நீங்கள் தொடர்ந்தும் பாடுங்கள் என்று நடிகர் சீமான் கில்மிஸ்ஷாவை வாழ்த்தியுள்ளார்.

இதேவேளை, நேற்றைய நிகழ்ச்சியில் கில்மிஸ்ஷா பாடிய பாடல் நடுவர்களிடமும் பாராட்டுக்களை அள்ளியது.