காலி சிறைச்சாலைக்குள் இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சந்தேக நபர் ஒருவர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (19) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கொஸ்கொட சுஜியின் நெருங்கிய உறவினர்களில் ஒருவரான ரத்கம விதுரவின் நெருங்கிய சகா ஒருவரே மற்றொரு குழுவைச் சேர்ந்த நால்வரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் கொஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த என்டா என அழைக்கப்படும் சுஜித் பிரசன்ன என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸும் சிறைச்சாலை நிர்வாகமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.