14 வயது சிறுமியுடன் திருமண உறவில் இருந்த இளைஞன்

0
287

கட்டுகஸ்தோட்டையில் 14 வயதான சிறுமியை 29 வயது இளைஞன் காதலித்து திருமண உறவில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் 29 வயதான அவ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த திருமண வாழ்க்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 வயது சிறுமியுடன் திருமண உறவில் இருந்த இளைஞன் | Young Man Marital Relationship 14 Year Old Girl

காதல் தொடர்பில் இருந்த இளைஞன்

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள கலவன் பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் பயிலும் அச்சிறுமியுடன் மேற்படி இளைஞன் ஒருவருடமாக காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அச்சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற இளைஞன் சிறுமியுடன் திருமண வாழ்க்கை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய ​இளைஞனும் சிறுமியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இளைஞனையும் தாயாரையும் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமியை தங்களுடைய பொறுப்பின் கீழ், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.