காணாமல்போன இரு யுவதிகள்; அவசர கோரிக்கை

0
192

கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியும், மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாழைச்சேனை கலைஞர் வீதி பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்த 17 வயதான பௌசூல் பாத்திமா இப்ஹா என்ற யுவதி கடந்த 12.07.2023 புதன்கிழமையில் இருந்து காணவில்லை என தெரிய வருகின்றது.

குறித்த யுவதி வீட்டிலிருந்து கடைசியாக பகல் 2.52 மணிக்கு வெளியேறும் போது கறுப்பு நிற ஹபாயாவும் சாம்பல் நிற சோலும் அணிந்திருந்துள்ளார்.

யுவதி தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0755192234 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.

இதேவேளை, கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது யுவதி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை, வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இலங்கையில் காணாமல்போன இரு யுவதிகள்: உறவினர்கள் விடுத்த அவசர கோரிக்கை | Two Young Women Missing Sri Lanka Relatives

குறித்த யுவதி கடந்த 14-07-2023 வீட்டிலிருந்து வெளியேறி தெமட்டகொட பகுதியிலிருந்து மாளிகாவத்தை செல்லும் வழியில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு காணாமல்போயுள்ள யுவதி கண்டுபிடிக்க உதவுமாறு தந்தை தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும், காணாமல்போன யுவதி தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் (077-3715446 -0761611667) என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.