கணவன் 2 தக்காளிகளை அதிகம் பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்து பிரிந்த மனைவி

0
320

மத்திய பிரதேசத்தில் ஒரு கறியில் கூடுதலாக 2 தக்காளிகளை கணவன் பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை விட்டுப் பிரிந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மனைவியை சமாதானப்படுத்தி பொலிஸார் நேற்று கணவனுடன் சேர்த்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநிலத்தின் ஷாதோல் மாவட்டம் தான்புரியை சேர்ந்த சஞ்சீவ் வர்மா மற்றும் இவரது மனைவி ஆர்த்தி இருவரும் அப்பகுதியில் சிறு ஓட்டல் நடத்தி வந்துள்ளனர். 

கணவன் இரு தக்காளிகளை அதிகமாக பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த மனைவி | Wife Furious Husband Used Too Many Tomatoes

ஏற்பட்ட தகராறு

இந்நிலையில்இ கடந்த வியாழக்கிழமை ஒரு கறியில் கூடுதலாக 2 தக்காளிகளை சஞ்சீவ் பயன்படுத்தியதை கண்டு ஆர்த்தி ஆத்திரமடைந்தார்.

தக்காளி விற்கும் விலையில் 2 தக்காளிகளை வீணடித்து விட்டதாக சத்தம் போட்டதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கணவனிடம் சொல்லாமல் தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கணவனின் குறைபாட்டுக்கு அமைய சில மணி நேரத்தில் ஆர்த்தி அவரது சகோதரி வீட்டில் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.