துருக்கி யுவதியிடம் சேட்டை விட்ட இலங்கை நபர்

0
211

தம்புள்ளை நோக்கிப் பேருந்தில் பயணித்த துருக்கி யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சந்தேகத்தின் பேரில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சந்தேக நபர் மாத்தளை மெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கி சென்ற குழு

மூன்று துருக்கிய யுவதிகளும் பாகிஸ்தானிய இளைஞரும் அடங்கிய குழுவொன்று கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கி பேருந்தில் சென்றுள்ளது.

இதன் போது சந்தேக நபர் தமக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவரின் உடலை தடவியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானிய இளைஞன் நடத்துனர் மற்றும் பயணிகளின் உதவியுடன் சந்தேக நபரை பிடித்து தம்புள்ளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சந்தேகநபர் இன்று தம்புள்ளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.