இலங்கையில் புத்த சிலையை சுற்றிவளைத்த குளவி கூடுகள்

0
208

நாகதீப பௌத்த விகாரையில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 50 அடி உயரம் உள்ள புத்தர் சிலையின் பல பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட குளவி கூடுகள் உள்ளன.

இந்த பெளத்த விகாரை நல்ல தண்ணீர் நகரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ளது.

இலங்கையில் புத்த சிலையை சுற்றிவளைத்த குளவி கூடுகள்: பீதியில் மக்கள் | Nagadeepa Raja Maha Viharaya Buddha Statue Wasp

தற்போது இந்த பகுதியில் கடும் காற்று வீசும் வேலையில் அங்கு காணப்படும் குளவி கூடுகள் கலைந்து அப்பகுதியில் சுற்றுவதுடன் மீண்டும் அதே சிலையில் கூடு கட்டி கொண்டுள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய உள்நாட்டு யாத்திரிகர்கள் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளதால் மிக மிக சொற்ப அளவில் சிரமங்களுக்குள்ளாகி வருவதாகவும் கடந்த காலங்களை போல் மீண்டும் சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கையில் புத்த சிலையை சுற்றிவளைத்த குளவி கூடுகள்: பீதியில் மக்கள் | Nagadeepa Raja Maha Viharaya Buddha Statue Wasp

இதேவேளை, வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மாலை வேளையில் சென்று காலை வேளையில் திரும்பி வரும் வழியில் எந் நேரத்திலும் குளவி கொட்டுக்கு இலக்காகலாம் என அப் பகுதியில் உள்ள அனைத்து விருந்தினர் விடுதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி அங்குள்ள குளவி கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Gallery
Gallery