டொலர்களை வைப்பிலிடும் வர்த்தகர்கள்! ஒரே வாரத்தில் இலட்சங்களை சம்பாதித்த போதகர் ஜெரோம்

0
186

சர்ச்சைக்குரிய நபரான போதகர் ஜெரோம் பெர்ணான்டோ இலங்கை உட்பட 8 நாடுகளை சேர்ந்த சுமார் 300 வர்த்தகர்களுக்கு வாரம் ஒரு தடவை இணையம் மூலம் வர்த்தக ஆலோசனை மற்றும் தேவ ஆசீர்வாதம் வழங்கி அந்த சொற்பொழிவின் மூலம் மாத்திரம் ஜெரோம் பெர்னாண்டோ 1.5 மில்லியன் (15 இலட்சம்) ரூபாவிற்கு அதிகமாக சம்பாதித்ததாக குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இந்த விடயம் தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளது.

குறித்த சொற்பொழிவு இணையவழியாக நடத்தப்படுவதுடன் அந்த சொற்பொழிவில் பங்குபற்றும் சர்வதேச ரீதியிலான வர்த்தகர்கள் 210 டொலர்களைச் செலுத்தியே அந்த நிகழ்வில் பங்கேற்பதாகவும் அதற்கான பணத்தை அவர்கள் இலங்கையிலுள்ள வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.