உக்ரைன் நாட்டின் மீது பயங்கர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் என கருதப்படும் விளாடிமிர் புடினுடைய கடற்படை தளபதியான 42 வயதான ஸ்டானிஸ்லாவ் (Stanislav Rzhitsky) என்பவர் பட்டப்பகலில் ஜாகிங் சென்றபோது மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் ரஷ்யாவில் உள்ள Krasnodar என்ற நகரில் அவர் ஜாகிங் சென்று கொண்டிருக்கும்போது ஒருவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டார் நெஞ்சிலும் முதுகிலும் 4 முறை சுடப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
அவரது கைக்கடிகாரம் முதலான எந்த பொருளும் திருட்டு போகாததால் இது கொள்ளை முயற்சி அல்ல என தெரியவந்துள்ளது.

எனினும், உக்ரைன் நகரமான வின்னிட்சியா மீது ஏவுகணை ஒன்றை ஏவ ஸ்டானிஸ்லாவ் உத்தரவிட அந்த ஏவுகணை 27 பேரை பலி கொண்டது. உயிரிழந்தவர்களில் 4 வயதுக் குழந்தையான லிஸாவை யாராலும் மறக்கமுடியாது.
லிஸாவின் தாய் ஐரினா அவளை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்போது அவர்கள் இருவரும் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானார்கள்.

தாக்குதலில் லிஸா கொல்லப்பட்டாள், அவளது தாய் படுகாயமடைந்தார். மேலும் ஸ்டானிஸ்லாவை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் சிசிரிவி இல்லாத இடத்தில் வைத்துத்தான் அவரைத் தாக்கியுள்ளார்.
என்றாலும் தாங்கள் நீல நிற தொப்பி அணிந்த நடுத்தர வயது ஆண் ஒருவரைத் தேடி வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.