இலங்கையில் நேற்றிரவு பயங்கர விபத்து..10 பேர் உயிரிழப்பு!

0
248

பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதாகவும், 40 பேருக்கு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இரவு பயங்கர விபத்து: 10 பேர் உயிரிழப்பு! 40 பேர் வைத்தியசாலையில் | Polonnaruwa Accident 10 People Death 40 Injured

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (09-07-2023) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான தனியார் பேருந்தில் சுமார் 70 பேர் வரை பயணித்துள்ள நிலையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்து பாலத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரியவருகின்றது.

இலங்கையில் இரவு பயங்கர விபத்து: 10 பேர் உயிரிழப்பு! 40 பேர் வைத்தியசாலையில் | Polonnaruwa Accident 10 People Death 40 Injured

விபத்து காரணமாக அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவிவருவதுடன், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.