தாயுடன் ஏற்பட்ட தகராறால் தூக்கில் தொங்கிய 19 வயது மகன்!

0
196

அம்பாறையில் தனியார் கட்டடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனங்காட்டு பாலத்திற்கு அருகில் உள்ள பூர்த்தி செய்யப்படாத தனியார் கட்டடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாயுடன் ஏற்பட்ட தகராறால் மகன் எடுத்த விபரீத முடிவு | Young Man Was Recovered Dead Body While Hanging

சடலமாக மீட்கப்பட்ட நபர்

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய கந்தசாமி அலக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாயுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக வீட்டை விட்டு இரு நாட்களுக்கு முன்னர் வெளியேறிய இளைஞரை உறவினர்கள் தேடிவந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறபடுகின்றது.