இலங்கையின் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு..

0
397

அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மீட்டியாகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் முக்கிய மூன்று பகுதிகளில் பலத்த பாதுகாப்பு | Strong Security In Three Key Areas

இதன்படி புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது ​​போகஹவெல பிரதேசத்தில் உள்ள ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் தற்காலிகமாக தங்கியிருப்பவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், உரிய இராணுவ சீருடைகள் ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.