யாழில் ஆசிரியரால் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

0
215

யாழ்ப்பாணம் – வலிகாமம் வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் ஆசிரியரால் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! வைத்தியசாலையில் அனுமதி | Teacher Attacked The Girl Student In Jaffna School

தரம் மூன்றில் கல்வி பயின்று வரும் மாணவியின் கையில் ஆசிரியர் மூர்க்கத்தனமாக தாக்கியதில் மாணவி கையைத் தூக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் நிலையை அறிந்து கொண்ட பாடசாலை நிர்வாகம் மருந்தகம் ஒன்றில் நோவுக்குரிய மருந்துகளை வாங்கிப் பூசியுள்ளனர்.

யாழில் ஆசிரியரால் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! வைத்தியசாலையில் அனுமதி | Teacher Attacked The Girl Student In Jaffna School

இதனையடுத்து, பாடசாலை விட்டதும் மாணவி வீடு சென்ற நிலையில் தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டாருக்கு தெரியப்படுத்தினார்.

இவ்வாறான நிலையில், தமது மகள் கையை தூக்க முடியாமல் அவதிப்படும் நிலையை அறிந்த பெற்றோர் யாழ். போதனா வைத்தியசாலையில் மகளை அனுமதித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் வலிகாம வலயக் கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.