பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த இளைஞர் அணி நிர்வாகி!

0
865

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாரதிய ஜனத்தாக கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பிலான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இளைஞர் அணி நிர்வாகி  கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் மீது சிறுநீர் கழித்த இளைஞர் அணி நிர்வாகி! | Piss On Youth Youth Team Administrator

 மதுபோதையில் இருந்த  நபர்

மத்திய பிரதேச   சித்தி மாவட்டத்தில் மதுபோதையில் இருந்த ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நபர், பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்தார்.

இந்நிலையில், பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தவர், பாஜக இளைஞரணியை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பது விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், பரவேஷ் சுக்லாவை கைது செய்த காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  

இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில்  அந்நபரின் செயலுக்கு  கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளது.