பிரான்ஸில் வன்முறையில் பாரிஸில் அமைந்துள்ள ஈழத்தமிழர் ஒருவரின் சூப்பர் மார்கெட் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் பிரான்ஸில் ஆபிரிக்க இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிசரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பெரும் கலவரங்கள் வெடித்தது.
பிரான்ஸின் பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டக்காரகள் கலவரங்களை உண்டாக்கியதுடன் தீயிட்டும் வாகனங்கள் கடைகள் கொழுத்தப்பட்டிருந்தன.
முற்றாக எரிந்து நாசம்
இதன்போது பாரிஸின் – கிளைமார் எனும் பகுதியில் அமைந்துள்ள ஈழந்தமிழரின் சூப்பர் மார்கெட்டும் வன்முறையில் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.
கடையில் இருந்த 90 வீதமான பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கபப்டும் நிலையில் இச்சம்பவம் பிரான்ஸ் வாழ் தமிழரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு போரினால் தமது வாழ்விடங்களை இழந்து, உயிரை மட்டும் காப்பாற்றி ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து பல இன்னல்களை கடந்து தமக்கென ஓர் அடையாளத்தை தேடிக்கொள்ளும்போது அங்கு ஒரு கலவரம் வெடித்து சொத்துக்களை இழப்பது பெரும் சோகமாகும்.