இந்திய ஊடகவியலாளரை ஆச்சரியப்பட வைத்த பிரபாகரனின் பாரிய நிலக்கீழ் தளங்கள்!

0
240

இந்தியாவின் பிரபல எழுத்தாளர் எம்.ஆர். நாராயன்சாமி INSIDE AN ELUSIVE MIND – PRABHAKARAN, என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

கோணார் பப்ளிசர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் 2003ம் ஆண்டில் வெளியிட்ட அந்த புத்தகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பான நிறைய விடயங்கள் வெளியாகியிருந்தன.

அந்த புத்தகத்தின் 22ம் அத்தியாயத்தில் Deep Underground என்ற தலைப்பில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் ‘நித்தகைக்குள தளம்’ பற்றி விபரிக்கப்பட்டிருந்தது.

ஏ-4 பேஸ் (A – four base) என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்ட அந்த நித்தகைக்குள தளத்தில் இருந்த நிலக்கீழ் சுரங்கங்கள், மற்றும் தளங்கள் பற்றியும், அந்த தளங்களில் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடர்புபட்ட சில சம்பவங்கள் பற்றியும் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்.