லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்பாடல் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.

சமீபத்தில் தான் இப்படத்தில் இருந்து முதல் பாடல் ‘நா ரெடி தான் வரவா’ வெளிவந்தது. சில சர்ச்சைகள் இப்பாடலை சுற்றி இருந்தாலும், ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகிறார்கள். இதுவரை இப்படம் youtube தளத்தில் சுமார் 40 மில்லியன் பார்வர்களை பெற்றுள்ளது.
வைரலாகும் வீடியோ

இந்த பாடலுக்கு நடனமாடி பல நட்சத்திரங்கள் வீடியோ வெளியிட்டு வரும் இந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வின், குல்தீப் போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ..