9 மாத குழந்தையில் முதல் பயணம்; 10 வயதில் 50வது முறையாக சபரிமலைக்கு யாத்திரை வந்த சிறுமி!

0
244

10 வயதில் 50வது முறையாக சபரிமலைக்கு யாத்திரை சென்று சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார். கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் எழுகோன் பகுதியை சேர்ந்த சிறுமி அத்ரிதி. இவர் ஏழுகோனில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்பு படித்து வருகிறார்.

இவரின் 10வது பிறந்தநாளுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில், தனது தந்தை அபிலாஷுடன் இருமுடி கட்டி 50வது முறையாக சபரிமலைக்கு வந்துள்ளார். இந்த சிறுமி முதன்முதலில் 9 மாத குழந்தையாக இருக்கும்போது தனது தந்தையுடன் சபரிமலைக்கு வந்துள்ளார்.

இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர பூஜை, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் வந்தபடி இருந்துள்ளார். இதனால் 10 வயதுக்குள் 50 முறை சபரிமலைக்கு வந்த பெறுமையை சிறுமி அத்ரிதி பெற்றுள்ளார்.        

9 மாத குழந்தையில் முதல் பயணம் - 10 வயதில் 50வது முறையாக சபரிமலைக்கு யாத்திரை வந்த சிறுமி! | Girl Turned 10 Trekked Sabarimala For 50Th Time