வவுனியாவில் 85000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!

0
293

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் வருடந்த பூஜை ஏல விற்பனையில் மாம்பழம் ஒன்று 85 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாக ஆலயத்தின் நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒருவர் இந்த ஏல விற்பனையில் மாம்பழத்தை கொள்வனவு செய்துள்ளார்.

ஆடி மாதத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் ஆலயங்களில் தற்போது வருடாந்த திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதன் போது ஏல விற்பனைகளும் நடைபெற்று வருகின்றன.

இதற்கு முன்னர் வவுனியா மாவட்டத்தில் பூஜை தட்டு ஒன்று 10 லட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Mango auction in Vavuniya Vinayagar Temple