காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான 75 சதவீத விசாரணைகள் நிறைவு 

0
349

1980 ஆண்டுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவுகளின் படி 75 சதவீதமான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பிராந்திய மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலத்தின் எற்பாட்டில் 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டோவர்களின் விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை 06.08.2023 அன்று கல்வியங்காட்டில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தில், யாழ்ப்பாண பிராந்திய மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலத்தின் அதிகாரி ப.தற்பரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் களவிஜயத்தினை மேற்கொண்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றப்புலனாய்வு, சட்டமா அதிபரின் அறிக்கைகளையும் பெற்றுவருகின்றோம். சந்தேகத்திற்கிடமான கோவையினையும் பெற்றுவருகின்றோம். இவற்றில் 14,988 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கோவைகளுக்கான விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இடர்கால நிவராணங்களை வழங்குகின்றோம். அது மருத்துவ உதவிக்காகவும் காணப்படுகின்றது. ஆனால் இழப்பீடு என்பது கொடுக்கவில்லை. உண்மையினை கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery