இலங்கையில் பரீட்சை எழுத வந்த 74 வயது முதியவர்!!

0
965

இலங்கையில் நேற்றைய தினம் 74 வயதான முதியவர் ஒருவர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்.

நெலுவ களுபோவிட்டியன பிரதேசத்தில் வசிக்கும் கலன் கொடகே சந்திரதாச என்பவரே நேற்றைய தினம் பரீட்சை எழுதுவதற்காக பரீட்சை மண்டபத்திற்கு  வருகைத்தந்திருந்தார்.

வயதானாலும் சாதனை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்ற ஆசையினால் இதுவரையில் சித்தியடையாத இரண்டு பாடங்களின் பரீட்சைக்காக முகம் கொடுப்பதற்காக அவர் வருகைத்தந்துள்ளார்.

முன்னர் எழுதிய பரீட்சையில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் சித்தி அடையவி்லை. இந்நிலையில் அந்தப் பாடங்களில் சித்தி அடையும் நோக்கில் இம்முறை பரீட்சைக்கு முகங்கொடுத்துள்ளார். 

இளம் சமூகத்தினருக்கு முன்னூதாரணம்

இள வயதினர் பலர் படிப்பின் மீது அக்கறையின்மையால் பாடசாலைகளில் இருந்து இடைவிலகி வருகின்றனர். இவ்வாறான நிலையில்74 வயதிலும் தனது ஆசையை நிறைவேற்ற பரீட்சை எழுத வந்த முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.