இரண்டாம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவியை தலையில் தொடர்ந்து அடித்ததால் மயங்கி விழுந்த மாணவி கோமாவுக்கு சென்ற நிலையில் அந்த சிறுமி உயிரிழந்திருக்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் அம்மாவட்டத்தில் போதன் ரோடு என்.ஆர்.ஐ காலடியில் வுட் பிரிட்ஜ் என்கிற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் 7 வயதான சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அந்த மாணவி சரியாக வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று சொல்லி ஆசிரியை புத்தகங்களை மாணவி தோளில் சுமந்தபடி வகுப்பறையை சுற்றிவர சொல்லி இருக்கிறார்.
அதன் பின்னர் அந்த மாணவியின் தலையில் அடிமட்டத்தில் அடித்துக் கொண்டே இருந்துள்ளார். இதில் அந்த மாணவி திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். விவரம் தெரிந்து பள்ளிக்கு ஓடிவந்த பெற்றோர்கள் தங்கள் மகளை நிஜாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் இரத்தம் உறைந்து உள்ளதாகவும் குழந்தை கோமா நிலையில் இருப்பதாகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். அங்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதன்பின்னர் பெற்றோர் பாடசாலை நிர்வாகம், ஆசிரியை மீது பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.
குழந்தை இறந்த செய்தி அறிந்து பாடசாலை நிர்வாகம் பாடசாலைக்கு விடுமுறை அறிவித்துள்ளது. தகவல் அறிந்த நிஜாமாபாத் மண்டல கல்வி அதிகாரிகள் பாடசாலையை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
குழந்தையை கண்முடித்தனமாக தாக்கிய ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். பாடசாலைக் கூடத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.