நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 7 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 4 பேர் 17-18 வயதுடைய சிறார்கள் எவும் ன பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

காதல் உறவு
இந்த ஏழு சம்பவங்களில் நான்கு சம்பவங்கள் கட்டாயப்படுத்தப்பட்டவை என்பதுடன், மூன்று சம்பவங்கள் காதல் உறவுகளால் ஏற்பட்டவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் 14, 15, 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதோடு பூஜாபிட்டிய, மருதானை, கொட்டவெஹெர, தும்மலசூரிய, பதவிய, மிட்டியகொட, யடவத்த ஆகிய இடங்களில் இருந்தும் இது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது
