2024ல் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் இலங்கைக்கு 5வது இடம்!

0
200

உலகலாவிய ரீதியில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. “இலங்கைத் தீவு நாடானது அதன் கவர்ச்சியான இயல்பு, சூடான காலநிலை, வண்ணமயமான கலாச்சாரம் மற்றும் அற்புதமான உணவு ஆகியவற்றால் உலகெங்கிலும் உள்ள பயணிகளை நீண்ட காலமாக கவர்ந்துள்ளது என இலங்கையை விபரிக்கும் வகையில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. துனிசியா, மெக்சிகோ, மொராக்கோ மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளுடன் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.