500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்; காரணம் ரணிலா?

0
317

500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய மக்கள் சக்தியின் செயலாளரான வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் அரசின் அடாவடித்தனமான வரி விதிப்பால் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுபவர்களிடமிருந்து 6 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை வரி அறவிடப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Nihal Abeysinghe

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வைத்தியர்கள் உட்பட ஏனைய தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் எதிர்காலத்தில் பாரிய சிக்கல் உருவாகும். வைத்தியர்கள் நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய சிறந்த திறமை படைத்தவர்கள். எனினும் அண்மைய நாட்களில் சுமார் 500க்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர். வைத்தியத்துறையில், தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களும் நாட்டை விட்டுச் செல்ல முடிவெடுத்துள்ளனர்” – என்றார்.