ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டவர்களில் 5 பேர் சடலமாக மீட்பு!

0
326

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பால் காசா முனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்களில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்கள் இடன் சிஷெர்யா, சிவ் டடூ, எலியொ டுலிடனொ, நிக் பெய்சர், ரொன் ஷெர்மென் ஆகிய 5 பேரை இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் சடலமாக மீட்டுள்ளனர். 

காசாவில் ஹமாஸ் சுரங்கத்திலிருந்து குறித்த 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் மீட்கப்பட்ட 5 பேரின் உடல்களை பாதுகாப்புப்படையினர் இஸ்ரேலுக்கு கொண்டு சென்றனர்.