அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் ரெயில் தண்டவாளம் அருகே நின்ற டிரெய்லர் டிரக்கில் இருந்து 42 சடலங்களை பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.
சான் ஆண்டானியோ நகரில் நின்ற மர்ம டிரக் குறித்து கிடைத்த தகவலில் பொலிசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் அகதிகள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
16 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
இதன்போது வெயிலின் தாக்கத்தால் அகதிகள் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படும் நிலையில், பொலிசார் மேலும் விசரித்து வருகின்றனர்.