பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை யாழில் மரணம்..!

0
185

யாழ்ப்பாண பகுதியொன்றில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் ஆண் குழந்தையே இவ்வாறு நேற்றைய தினம் (18-12-2023) உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குழந்தை கடந்த 14ஆம் திகதி யாழ். திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிறந்துள்ளது.

இந்த நிலையில் தாயும் சேயும் கடந்த 16ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில் நேற்றையதினம் மதியம் குழந்தையின் உடல் திடீரென குளிர்ந்ததுடன் உடலில் சிவப்பு கை காலில் அவதானிக்கப்பட்டது.

யாழில் பெரும் துயர சம்பவம்: பிறந்து 4 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த சோகம்! | Four Day Old Baby Boy Died In Jaffna Thirunelveli

இதனையடுத்து, குழந்தை மீண்டும் திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை, அவர்கள் அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

குழந்தையின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.