இசைக்கருவிகளுக்கு இருந்து 4 கோடி ரூபாய் ஐஸ் சிக்கியது

0
174

கொட்டாஞ்சேனை, சுமித்ராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில்  சுமார் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இசைக்கலைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார்  தெரிவித்தனர்.

372 போதைப் பொருட்களையும், 1 கிலோ 558 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் அத்துடன் சந்தேநபரையும் கைது செய்துள்ளனர்.

ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸ் குழுவொன்று குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை நடத்தியதுடன், இசைக்கருவிகளுக்கு மத்தியில் டிரம்மொன்றில் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தேக நபர் சில காலமாக, இசைக்கருவிகளை வாடகைக்கு கொடுப்பதில் ஈடுபட்டு இருந்துள்ளார். அந்த போர்வையில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.