கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள வீடமைப்புத் தொகுதியில் குஷ் மற்றும் கொக்கேய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 68 மில்லிகிராம் குஷ் ரக போதைப்பொருள், 5 கிராம் கொக்கேய்ன் ரக போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்கள் நேற்று (13) கொழும்பு – கோட்டை நீதவான் கோசல சேனாதீர முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் 7 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
