நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் உள்ளிட்டவை ஏறக்குறைய நிறைவடைந்துள்ள சூழலில் நாளை இந்த படத்தின் 3வது சிங்கிள் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் இளம்வயது விஜய் மீனாட்சி சவுத்ரியுடன் நிழல் உருவமாக காணப்படுவதாக உள்ளது. மேலும் இன்று 11 மணி அளவில் படத்தின் அடுத்த அப்டேட்டும் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தற்போது அரசியல் கட்சி துவங்கி அதில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.
கோட் படத்தின் ஷூட்டிங், தொடர்ந்து டப்பிங்கையும் நிறைவு செய்துள்ள நடிகர் விஜய் அடுத்ததாக இசை வெளியீட்டில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
