கொழும்பு துறைமுகத்தில் 35 சொகுசு கப்பல்கள் நிறுத்தம்: போதிய வசதிகளை வழங்க துறைமுக அதிகாரசபை நடவடிக்கை

0
312

2024 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் சுமார் 35 சொகுசு பயணிகள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. தற்போதைய பயணிகள் முனையத்தில் போதுமான இடவசதி இல்லாமையால் குறித்த நடவடிக்கைகளுக்கு பண்டாரநாயக்க பகுதியில் உள்ள முனையத்தை பயன்படுத்துவதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் பழைய பயணிகள் முனையம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்கவும், உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை பராமரிக்கவும், அபிவிருத்தி பணிகள் முடியும் வரை ஏனைய வசதிகளை வழங்கவும் துறைமுக அதிகாரசபை உடனடி வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.