வவுனியா பாடசாலை ஒன்றின் 32 மாணவர்களும் 8ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி!

0
431

வவுனியா பிரதேச பாடசாலை ஒன்றில் இன்று (17) காலை குளவிக் கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

காற்றின் வேகத்தால் கலைந்த குளவிக்கூடு

குறித்த பாடசாலையின் காலைப் பிராத்தனையின்போது காற்றின் வேகம் காரணமாக மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொட்டியுள்ளது.

இதனால் பாதிப்படைந்தவர்களில் 12 மாணவர்கள் பதவியா பிரதேச வைத்தியசாலையிலும் 8 ஆசிரியர்கள் மற்றும் 12 மாணவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் , 3 மாணவர்கள் மடுகந்த பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

வவுனியாவில் இன்றுகாலை பாடசாலை சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை! | Students School This Morning In Vavuniya
வவுனியாவில் இன்றுகாலை பாடசாலை சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை! | Students School This Morning In Vavuniya