4 மாதங்களில் 3,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்!

0
284

இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மூவாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க ஊடகமொன்றிக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்,

அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் எண்ணாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சிறுவர்களின் செயற்பாடுகள், கல்வி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவற்றில் மூவாயிரம் முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம்; 4 மாதங்களில் 3,000 முறைப்பாடுகள்! | Child Abuse 3 000 Complaints In 4 Months