3 லட்சம் மக்கள் வாக்குகளை இழக்க நேரிடும்!

0
517

ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு வகையிலும் தேர்தல் நடத்தப்பட்டால் நாட்டில் கிட்டத்தட்ட 3 இலட்சம் மக்கள் வாக்குகளை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஒக்டோபர் 31 ஆம் திகதி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

3 இலட்சம் மக்கள் வாக்குகளை இழக்கும் நிலை! | 3 Lakh People Will Lose Their Votes

இதன் காரணமாக இந்தாண்டில் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக பெறப்பட்ட பெயர்களை சேர்க்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான எந்த ஆயத்தமும் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது .