இந்தியாவின் மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற அரிதினும் அரிதான நிகழ்வு நடந்துள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையில் காஜல் விகாஸ் (27) என்ற பெண் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வயிற்றில் 4 குழந்தைகளை சுமந்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் கர்ப்பிணி தாயிற்கு அறுவை சிகிச்சையில் 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை பிறந்து நலமுடன் உள்ளனர்.
குஜராத்தைச் சேர்ந்த அவரது கணவர் விகாஸ் ககுர்தியா, சஸ்வாத்தில் ஒரு கொத்தனார் வேலை செய்கிறார். அவர்களின் எளிமையான வீடு இப்போது ஏழு சிறிய தேவதைகளின் மகிழ்ச்சியான குழப்பம் மற்றும் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது,
அதேவேளை 4 குழந்தைகளை பிரசவித்த காஜல் இதற்கு முன்பு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தவர். இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இருந்தது. இதனால் காஜலுக்கு மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பது என்பது அரிதிலும் அரிதான நிகழ்வு என்றும் 10 லட்சத்தில் இருந்து 5 கோடி பிரசவத்திற்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்ற பிரசவம் பதிவாகிறது என்றும் டாக்டர்கள் தெரிவித்த்துள்ளனர்.