ஒரு குரங்குக்கு 25,000 ரூபாய்; உண்மையை போட்டுடைத்த அமைச்சர்!

0
256

இலங்கை குரங்குகள் சீனாவுக்கு அனுப்படுவது குறித்து சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் சீன தூதரகம் இலங்கை குரங்குகளை தாம் கோரவில்லை என அறிக்கை வெளியிட்டது.

சர்ச்சைக்குரிய பேச்சுக்கள்

நாட்டில் இருந்து குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு பல்வேறு தரப்புக்களை எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்ந்லையில் இலங்கையில் உள்ள குரங்குகளை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தோராயமாக 20,000 முதல் 25,000 ரூபா வரை செலவிட வேண்டியிருக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவது தொடர்பில் நாட்டில் இடம்பெற்று வரும் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் தொடர்பில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் , “இந்த திட்டம் சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து எமக்கு வந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவல்களை அமைச்சரவையில் தெரிவிப்போம்.

ஒரு குரங்கிற்கு 25,000 ரூபாய்; உண்மையை போட்டுடைத்த அமைச்சர்! | 25 000 Per Monkey Minister Who Put The Truth

இறைச்சிக்கு அனுப்ப மாட்டோம்

இதை செயல்படுத்துவது குறித்து துணைக்குழுவின் ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்படும். சீனாவில் உள்ள 1000க்கும் அதிகமான உயிரியல் பூங்காக்களுக்கு வழங்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதோடு “அவர்கள் இதனை உடனடியாக செயல்படுத்தத் தயாராக இருக்கிறார்கள். அடுத்த மாதம் சுமார் 1000 குரங்குகளை கொண்டு செல்ல அனுமதி கேட்டார்கள். ஆனால் அப்படி அனுமதி கொடுக்க முடியாது.

ஒரு குரங்கிற்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அவர்கள் செலவிட வேண்டி ஏற்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட்டு பேசினாலும் இறைச்சிக்கு விலங்குகளை அனுப்ப மாட்டோம் என தெரிவித்த அமைச்சர் மகிந்த அமரவீர ,ஒரு குரங்கை 50,000 அல்லது 75,000 கொடுத்து சாப்பிட அந்த மக்களுக்கு என்ன பைத்தியமா? என்வும் தெரிவித்தார்.