ரணில் விக்ரமசிங்க நேபாளத்திற்கு விஜயம்

0
35

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அவர் காத்மண்டு ட்ரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக நேபாள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளார். நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் பலரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.