இந்திய பிரஜைகள் அதிகளவில் வசிக்கும் அமெரிக்காவில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அங்குள்ள ஒகியோ மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தங்களுக்கு விருப்பமான மேலும் ஒரு இந்து பண்டிகைக்கும் மாணவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள இந்த சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.