சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி துஸ்பிரயோகம்

0
30

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன் தினம் (24) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்த முறைப்பாட்டில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலர்களான மாணவனும் மாணவியும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.

இதன்போது அங்குவந்த அடையாளம் தெரியாத இருவர் மாணவரை தாக்கிவிட்டு அவர் கண்முன்னே மாணவியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி துஸ்பிரயோகம் | Student Abused On Anna University Campus

பாதிக்கப்பட்ட காதலர்கள் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் சம்பம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நடைபாதையில் பிரியாணி கடை நடத்தும் இளைஞர் கைது செய்யப்பட்டு மேலதிக  முன்னெடுத்து வருகின்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.