முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன ‘சர்வஜன பலய’ அரசியல் கூட்டணியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இதன்படி அந்தக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவிடமிருந்து கட்சி அங்கத்துவதற்திற்கான கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
கட்சி உறுப்பினர் பதவிக்கு கூடுதலாக சர்வஜன பலயவின் தலைமைத்துவக் குழுவிற்கும் சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார். 2001 முதல் 2024 வரை அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக சந்திரசேன பணியாற்றினார். இந்த காலப் பகுதியில் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்தில் பல்வேறு அமைச்சர் பதவிகளையும் வகித்திருந்தார்.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.